மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ; ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுப்பு

mannar1மன்னார் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கு மாவட்டத்தில் இடம்பெறும் நிகழ்வுகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்திற்கான 2 ஆவது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் நேற்று திங்கட்கிழமை மாவட்ட செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் மாலை 3.30 அளவில் இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர் றிசாட்பதியூதீன், நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சாள்ஸ் நிர்மலநாதன், கே.மஸ்தான், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா,

வட மாகாண சபை அமைச்சர்களான பா.டெனிஸ்வரன், ரி.குருகுலராஜா, பா.சத்தியலிங்கம், அதன் உறுப்பினர்களான பிறிமுஸ் சிராய்வா, ஞானசீலன் குணசீலன், றிப்கான் பதியூதீன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களுக்கு கூட்டத்தின் நிறைவில் விளக்கம் கொடுக்கப்படும் எனவும், எனவே அனைத்து ஊடகவியலாளர்களையும் வெளியேறுமாறும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய உரத்த தொனியில் பணித்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் ஊடகவியலாளர்கள், சுயாதீனமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதாகவும், மன்னார் அரச அதிபரின் இவ்வாறான கருத்து அனைவரையும் விசனமடையச் செய்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ள எமது செய்தியாளர்,

நல்லாட்சி அரசாங்கத்திலும் தமது சுதந்திரம் பறிக்கப்படுவதாக விசனம் வெளியிட்டார்.

Previous articleமகளை கொடுமைப்படுத்திய பெற்றோருக்கு விளக்கமறியல்
Next articleகிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவரிடையே மோதல் ; விரிவுரைகள் இடைநிறுத்தம்