சேயா படுகொலை வழக்கு – குற்றவாளிக்கு மரண தண்டனை

saman-jayalathபாலியல் வன்புனர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடதெனியாவ சிறுமி சேயா சவ்தமியின் சம்பவம் தொடர்பில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சமன் ஜெயலத் என்பவருக்கு மரண தண்டனை விதித்து நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் சிறுமி சேயா பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பில் கைதான சமன் ஜெயலத் குற்றத்தை தானே இழைத்ததாக வாக்குமூலம் அளித்ததோடு அவரது மரபணுக்கள் குற்றத்துடன் ஒத்துப்போனது.
இதனையடுத்து அவருக்கு இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Previous articleகிழக்குப் பல்கலைக்கழகத்தில் மாணவரிடையே மோதல் ; விரிவுரைகள் இடைநிறுத்தம்
Next articleநடிகர் சங்கத்திலிருந்து சரத்குமார் நீக்கம்- அதிர்ந்த கோலிவுட்