தற்பொழுது நாட்டின் பல பகுதிகளிலும் நடைமுறையில் உள்ள மின்சார தடையை நேரசூசிக்கு அமைய நடைமுறைப் படுத்துவதற்கு இலங்கை மின்சார சபை தீர்மானித்துள்ளது.
அதற்கமைய மின்சாரம் தடைப்படும் பிரதேசம் மற்றும் நேரம் அடங்கிய நேரசூசியை இன்றைய தினத்தில் ஊடகங்களுக்கு வெளியிட எதிர்பார்த்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதேவேளை தற்பொழுது சமூக ஊடகங்கள் மூலமாகவும், சில இணையங்கள் மூலமாகவும் வெளியிடப்பட்டுள்ள மின்சார தடைக்கான நேரசூசி உத்தியோகபூர்வமானது இல்லை எனவும் தெரியவந்துள்ளது.