ஐ.எஸ் தீவிரவாதிகளின் கொடூர முகத்தை ரகசியமாய் படம் பிடித்த பெண்கள்

sriya-womanசிரியாவில் ஐ.எஸ். ஆதிக்கத்தில் இருக்கும் ரக்கா நகரம் சிதைந்து வருவதை அங்குள்ள பெண்கள் இருவர் படம் பிடித்துள்ளனர்.

சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களின் வாழ்க்கை முறை எப்படி மாறியுள்ளது என்பதை அந்த பெண்கள் படம் பிடித்துள்ளனர். கிளர்ச்சி வெடிக்கும் முன்னர் பரபரப்பாகவும் மிகவும் சுதந்திரமாகவும் இருந்த ரக்கா நகரத்தில் தற்போது கெடுபிடிகள் அதிகரித்துள்ளதாகவும், பெரும்பாலும் வெளிநாட்டு ஐ.எஸ். தீவிரவாதிகள் மட்டுமே வீதியில் நடமாடி வருவதாகவும் அந்த பெண்கள் குறிப்பிடுகின்றனர்.

ஐ.எஸ். ஆதிக்கத்தினால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் அவர்கள், பெண்களுக்கு மட்டும் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளனர். ரக்கா நகரில் பெருகி வரும் கலவரங்களையும் ஐ.எஸ். குழுவினரால் படுகொலை செய்யப்படும் சாதாரண மக்களின் நிலையையும் அவர்கள் நினைவு கூறுகின்றனர்.

பெண்கள் எப்போதும் தங்கள் முகத்தை காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள் என தெரிவித்தவர்கள், ஆனால் தற்போது முகத்திரை கட்டாயமாக்கப்படுகிறது என்றனர்.

தலைமுடியில் பூசும் சாயம் வாங்க மட்டுமே பெண்களை கடைகளில் அனுமதிக்கப்படுவதாகவும் கூறும் அவர்கள் தங்களது பெண்மைத் தன்மையை சிறுக இழப்பதாக தெரிவிக்கின்றனர்.

தொடர்ந்து 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் கிளர்ச்சியால் சுமார் 250,000 நபர்கள் உரிழந்துள்ளனர், 10 மில்லியன் பேர் குடிபெயர்ந்துள்ளனர்.

உலக நாடுகள் தங்களின் நிலை உணர வேண்டும் என கூறும் அந்த சிரியா இளம் பெண்கள், ஐ.எஸ் ஆதிக்கத்தில் இருந்து சிரியா ஒரு நாள் விடுபடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.sriya woman

Previous articleவிடுதலைப் புலிகளின் பயண அனுமதி விண்ணப்ப படிவங்களில் யாழில் கச்சான் விற்பனை!
Next articleதயா, ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்றில்