நாளுக்கு 7 1/2 மணி நேர மின்வெட்டு அமுல்! மின்சார சபை அறிவிப்பு

201602122328260807_In-Bangalore3-hours-dailyUnscheduled-power-cuts_SECVPFஇலங்கையை 4 வலயமாக பிரித்து இரு கட்ட மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
அதன் அடிப்படையில் மு.ப. 7.00 மணி – பி.ப 12.30 மணி வரையும், பி.ப. 6.00 மணி முதல் 8.00 மணி வரை ஒரு கட்டமாகவும்,

அதே போன்று பி.ப. 12.30 மணி – பி.ப 6.00 மணி வரையும், பி.ப. 8.00 மணி முதல் பி.ப. 10.00 மணி வரை மற்றொரு கட்டமாக மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

இதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை நுரைச்சோலை மின்நிலையத்தை பார்வையிடச் சென்ற மின்சக்தி வள அமைச்சர் சியம்பலாபிட்டிய, நாளை புதன்கிழமை பிற்பகலில் அல்லது நாளை மறுதினம முற்பகலில் மின்வெட்டை நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.

நுரைச்சோலை மின்நிலையத்தின் செயற்பாட்டில் ஏற்பட்டே கோளாறின் காரணமாக, முழு இலங்கைக்கும் அவசியமான மின்சாரத்தை ஒரே தடவையில் வழங்க முடியாதுள்ளமை குறித்த மின்வெட்டுக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleஆசிரியையுடன் ஓடிய மாணவன் மதுரை ஐகோர்ட்டில் ஆஜர்: தாயுடன் செல்வதாக கூறியதால் வழக்கில் திடீர் திருப்பம்
Next articleபலரின் மனதை கவர்ந்த மொட்ட சிவா