அகதி முகாமில் ஈழத்தமிழர் மீதான கண்மூடித்தனமான தாக்குதல்!

ஐயா! வணக்கம்,
தர்சினி ஆகிய நானும் எனது கணவரும் இரண்டு பிள்ளைகளுடன் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வருகிறோம்.

இந்நிலையில் கடந்த 22.2.2016 அன்று எனது கணவருக்கும் எமது முகாம் தலைவருக்கும் இடையே சிறு சண்டை ஏற்பட்டது. அப்போது இப்பிரச்சனைக்கு சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போது இரு தரப்பினரையும் 23.2.2016 அன்று மாலை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்

விசாரணைக்கு அழைத்துச் சென்ற எனது கணவரை காவல் நிலையத்துக்கு உள்ளே கூட அழைத்துச் செல்லாமல் ஒரு நாயை போட்டு தெருவில் அடிப்பது போல எனது கணவரின் இரு கால் களையும் முட்டிக்கீழ் காவல் துறை இன்ஸ்பெக்டர் டில்லிபாபு தலைமையில் ஆன நான்கு அதிகாரிகள் கால்களை முறித்துவிட்டனர்.

பின்பு டில்லி பாபு தனது பூட்ஸ்காலால் எனது கணவரின் நெஞ்சில் எட்டி உதைத்தார். அதன் பின் முறிந்த காலில் பூட்ஸ்காலல் ஏறி குதித்து, எழும்பி நடடா நாயே என்று கேவலமாக பேசினார். நாங்கள் அதைப்பார்த்து கதறி அழுது கேட்டபோது எங்களை திட்டி அனுப்பிவிட்டார்.

அய்யா எனது கணவர் தினமும் கூலி வேலைக்கு செல்பவர். எனக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர் அவர்கள் இருவரும் படிக்கிறார்கள் நானும் உடல் நிலைசரியில்லாதல் எங்களுக்கு உறவினர்கள் யாரும் இல்லை. இந்நிலையில் எனது கணவரின் இரண்டு கால்களையும் உடைத்து அவரை படுத்த படுக்கையாக்கி விட்டனர்.

இந்த காவல் துறையினர் நாங்கள் இலங்கை அகதிகள் என்பதால் பெரிதும் துன்புறுத்துகின்றனர் எனது கணவருக்கு ஸ்டாலின் அரசு மருத்துவ மனையில் எலும்ம்பு முறிவு பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறோம் அவருக்கு இரண்டு காலும் முறிந்து விட்டதால் அவர் எழுந்து நடப்பது எப்போது என்றே தெரியவில்லை.

நான் எனது குழந்தையுடன் சிரமப்படுகிறேன். காவல் துறையினரால் எனது குடும்பத்திற்கும் எங்களின் உயிருக்கும் ஆபத்து உள்ளது தயவு கூர்ந்து காப்பாற்றுங்கள்!

இப்பிரச்சினைக்கு மனித நேயத்தோடு எதிர்கொண்டு எனது கணவரின் மருத்துவ உதவிக்காகவும், எனது குழந்தைகளின் படிப்பு செலவிற்காகவும் உரிய இழப்பீடு தொகை பெற்று தந்து இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்!
nitharsan_page_1

nitharsan_page_2

nitharsan_page_3

nitharsan_page_4

nitharsan_page_05nitharsan_page_06nitharsan_page_007

Previous articleயாழின் பிரபல ஆண்கள் பாடசாலையின் சிரேஷ்ட மாணவர்களால் கொலை வெறித் தாக்குதலுக்கு உள்ளான மாணவன்
Next articleபொட்டு அம்மான் உயிருடன் இருக்கின்றார்?