மின்சார விநியோகம் நாளை வழமைக்கு திரும்பும்!- அரசாங்கம்

201602122328260807_In-Bangalore3-hours-dailyUnscheduled-power-cuts_SECVPFஇலங்கையில் மின்சார விநியோகம் நாளை காலை முதல் வழமைக்கு திரும்பும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
மின்சக்திதுறை அமைச்சர் ரஞ்சித சியம்பலாபிட்டிய இதனை அறிவித்துள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தின் பணிகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்படும் நிலையிலேயே இந்த இயல்பு நிலை ஏற்படும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நுரைச்சோலை அனல் மின்சார மையத்தின் தன்னியக்க உற்பத்தியில் ஏற்பட்ட பிரச்சினையே மின்சார தடைக்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் தற்போது நாட்டில் நேர அட்டவணையின்படி நாளொன்றிற்கு ஏழரை மணிநேர மின்சார விநியோகத்தடை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleவெங்காயம் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
Next articleஅவர்களை நரகத்தில் எரியுங்கள் – கோபத்துடன் த்ரிஷா