காரைநகரில் பனங்கிழங்குச் சண்டையால் பறிபோன உயிர்!

kelinkuபனங்கிழங்கு பிடுங்குவதில் ஏற்பட்ட சண்டையால் பரிதபகராமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். காரைநகர் கல்வன்தாழ்வுப் பகுதியிர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 4ம் திகதி வெள்ளிக்கிழமை இறந்த பெண்ணான 56 வயதான சின்னத்துரை தவமணிதேவிக்கும் தங்கையின் கணவருக்கும் இடையில் பனங்கிழங்கு பிடுங்குவதில் ஏற்பட்ட சண்டையில் தங்கையின் கணவரான யோகராசா ஜெயராசா பனங்கிழங்கு பிடுங்கிக் கொண்டிருந்த மண்வெட்டியால் தவமணிதேவியின் தலையைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.

இதனால் அந்த இடத்திலேயே மயக்கமடைந்த தவமணிதேவி காரைநகர் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.10 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த தவமணி தேவி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து யாழ் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். தவமணிதேவியைத் தாக்கிய ஜெயராசா தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் அவரை ஊர்காவற்துறைப் பொலிசார் தேடிவருவதாகத் தெரியவருகின்றது.

Previous articleகாதல் விவகாரம் : அதிர்ச்சிக்குள்ளான மாணவி: இறுதியில் பொய்யானது
Next articleஇலங்கை போர்க்குற்றவாளிகளின் கூடாரம் – அவுஸ்ரேலிய ஊடகம்