இராணுவத்துடன் நெருங்கிய புதிய ஆளுநர்!

rageகூட்டமைப்பு சார்பு வடமாகாணசபையின் செயற்பாடுகளை வேவு பார்க்க முன்னைய ஆளுநர் சந்திரசிறி போல இராணுவப்புலனாய்வு கட்டமைப்புக்களினைப் பயன்படுத்துவது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ராஜதந்திரிகளுடனான சந்திப்புக்கள், உரையாடல்களில் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பில் புதிய அரசு கூடிய அக்கறை செலுத்திவருகின்றது.

குறிப்பாக முதலமைச்சரது கருத்துக்கள் தொடர்பில் இலங்கை அரசு கூடிய கவனம் செலுத்திவருகின்றது.

இது தொடர்பான அறிக்கைகளைத் தயாரித்து அனுப்ப முன்னைய ஆளுநர் சந்திரசிறி பாணியில் புதிய ஆளுநரும் செயற்படுவதாகவும் பலாலி இராணுவத்தலைமையகத்தின் உதவி பெறப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Previous articleபொட்டு அம்மானுக்கு பயந்து இரகசிய இடத்தில் கருணா?
Next articleபெரியப்பாவினால் சூடு வைக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்