யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தியாவிலிருந்து ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை ஸ்ரீலங்காவை சென்றடைந்துள்ளது.
பலாலி விமான நிலைய புனரமைப்பு தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல் ஒன்று கொழும்பிலுள்ள இந்திய உயர்தானிகராலயத்தில் இன்று புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக் சாஷ்திரி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் குறித்த குழுவினர் ஸ்ரீலங்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாகவும், விமான நிலைய தொழில்நுட்ப பணிகள் தொடர்பிலான ஆலோசனைகளை வழங்கவுள்ளதாகவும் தீபக் சாஷ்திரி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஐந்துபேர் அடங்கிய குழு பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பலாலி விமான நிலையம் புனரமைப்பு செய்யப்படுவதாக காணி நில அளவைகள் இடம்பெற்று வருவதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
பலாலி விமான நிலையத்திற்காக 1987ஆம் ஆண்டு ஜுன் மாதம் 28ஆம் திகதி பெருமளவிலான பொதுமக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Palali-Airport