இயற்கையின் வயாக்ரா “தர்பூசணி”யின் முத்தான நன்மைகள்!

watermelon_003வெயில் காலம் என்றதுமே நம் அனைவரின் நினைவுக்கு வருவது தர்பூசணி தான்.

தர்பூசணி பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளன, வெயில் காலங்களில் உடலின் வெப்பநிலையையும், இரத்த அழுத்தத்தையும் சரிசெய்கிறது.

ஆரோக்கியமான ஊட்டச்சத்தை வழங்கக்கூடிய பழங்களில் ஒன்றான தர்பூசணியில், விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்து காணப்படுகிறது.

100 கிராம் தர்பூசணியில், 90% தண்ணீர் மற்றும் 46 கலோரிகள், கார்போஹைட்ரேட் 7% உள்ளது.

இதில் விட்டமின் ஏ மற்றும் சி நிறைந்து காணப்படுவதால் கண் மற்றும் மூளை சம்பந்தமாக நோய்களை தடுக்கிறது.

கட்டி, ஆஸ்துமா பெருந்தமனி வீக்கம், நீரிழிவு, பெருங்குடல் புற்றுநோய், மற்றும் கீல்வாதம் போன்றவற்றை தர்பூசணி மூலம் குணப்படுத்த முடியும்.

இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்டான லைகோபைன் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது, குறிப்பாக ஆண்களுக்கு வரும் புரோஸ்டேட் புற்றுநோயின் அபாயத்தை தடுக்கிறது.

இரும்புச் சத்து நிறைந்ததாகும். இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும்.

குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தர்பூசணி சாப்பிடுவதன் மூலம் பொட்டாசியத்தை அதிகரித்து கொள்ள முடியும், அதுமட்டுமின்றி இன்சுலினையும் அதிகரிக்கிறது, மெக்னீசியம் மற்றும் புரதம் கொழுப்பைக் குறைக்கவல்லது.

குறிப்பாக இதற்கு ஆண்மையை அதிகரிக்கும் சக்தியை இருப்பதை அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ குழு கண்டுபிடித்துள்ளது.

இதிலுள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.

இதன் மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது. அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

* எடையை குறைக்க நினைப்பவர்கள் தர்பூசணி ஜூஸில் மிளகுத் தூள் கலந்து குடிக்கலாம்.

* அதுமட்டுமின்றி கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்து உடலில் நல்ல கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது, இதயத்திற்கும் ஆரோக்கியமான ஒன்றாகும்.

* கோடையில் அதிகமான வியர்வை காரணமாக ஏற்படும் அரிப்பு உட்பட பல்வேறு தோல் சம்பந்தமான நோய்களும் வராமல் பாதுகாக்கிறது.

* மிளகுத் தூள் சேர்த்து குடிப்பதால் செரிமான மண்டலத்தில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றி மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.

Previous articleஉலக சாதனை படைத்த கெய்ல், அப்ரிடி
Next articleநான் இல்லைங்க – அதிர்ந்த விஜய் சேதுபதி