குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட திடீர் தீவிபத்து: குழந்தைகள் உட்பட 6 பேர் காயம்

margkam_fire_002கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்தனர்.
கனடாவின் மார்க்கம் பகுதியில் உள்ள Steeles அவெனியு மற்றும் மக்கோவான் வீதி, டக்ளஸ் ஹெயிக் டிரைவில் உள்ள வீடொன்றில் இந்த தீ விபத்து ஏற்பட்டது.

3 குழந்தைகள், பெண் ஒருவர் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதில் முதியவர் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியதாவது, முதலில் புகை மூட்டம் மட்டுமே ஏற்பட்டது. பின்னர் மீண்டும் எதோ வெடிப்பது போன்ற சத்தம் கேட்டது.

அதன் பின்னர் தீ கொளுந்துவிட்டு எரியத்தொடங்கியது என்று தெரிவித்துள்ளனர்.

இந்த தீச்சுவாலைக்கான காரணம் தெரிய வரவில்லை. இது தொடர்பாக ஒன்ராறியோ தீயணைப்பு அதிகாரி விசாரனையில் ஈடுபட்டுள்ளார்.

இப்பகுதியில் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleநான் இல்லைங்க – அதிர்ந்த விஜய் சேதுபதி
Next articleஇராணுவச் சிப்பாயை காட்டுக்குள் உதைத்துக் கொன்றார் கோத்தா