மின்சாரத்துக்கு இடையூறு விளைவிக்கும் மஹிந்தவின் அவதாரங்கள் விரைவில் வெளியில்..!

electricity-Mrநல்­லாட்­சியைத் தோற்­று­வித்த­தி­லி­ருந்து அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் மந்தகதி­யி­லேயே உள்­ளன. ஆனால் அதன் பிர­தி­ப­லன்கள் ஐக்­கிய தேசியக் கட்­சியின் மீது நம்­பிக்கை கொண்டு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு வெகு­வி­ரைவில் கிடைக்கும். மக்­களை நாங்கள் மற­ந்­து­வி­ட­வில்­லை­யென டிஜிட்டல் தொழி­ல் நுட்பம் மற்றும் தொடர்­பாடல் வலு­வாக்கல் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ நம்­பிக்கை வெளி­யிட்டார்.

மின் உற்­பத்திச் செயற்­பா­டு­களில் தமது நாச­காரச் செயற்­பா­டு­களை காண்­பித்து குழப்ப முற்­படும் மஹிந்­தவின் அவ­தா­ரங்கள் யார் என்­ப­தையும் விரைவில் நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டுத்­துவோம் எனவும் குறிப்­பிட்டார்.

நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்பை தக்கவைத்­துக் ­கொள்­ள­வது தொடர்பில் இடம்­பெற்ற பொதுக்­கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்தை உரு­வாக்­கிய பின்னர் அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் மந்தகதி­யி­லேயே இடம்­பெ­று­வ­தாக ஒரு எண்­ணத்தை மக்­க­ளி­டையே உரு­வாக்கி, அத­னூ­டாகத் தம்மை வலுப்­ப­டுத்­திக்­கொள்ள கூட்டு எதிர்­க்கட்­சியை சேர்ந்த சிலர் முயற்­சிக்­கின்­றனர்.

ஆனால் மஹிந்­தவின் அவ­தா­ரங்கள் அவரை வைத்து மீண்­டெழ எத்­தனை முறை முயற்­சித்­தாலும் அது அவர்­களால் முடி­யாது என்­பதே உண்­மை­யான நிலைப்­பாடு. அது தெரிந்­தி­ருந்தும் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் குறை­பா­டுகள் உள்­ள­தென சுட்­டிக்­காட்டி மக்கள் ஆத­ரவைப் பெற்­றுக்­கொள்ள முற்­ப­டு­கின்­றனர்.

இதற்­காக பாரிய ஆர்ப்­பாட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்­றனர். இவர்கள் போல் ஆர்­ப்பாட்­டங்கள் செய்­வது எமக்கு புதிய விட­ய­மல்ல. ஐக்­கிய தேசியக் கட்­சியின் பலத்தைக் காட்­டு­வ­தற்­கா­கவே ஆளும் கட்­சி­யாக இருந்தும் வீதி­யி­லி­றங்கி எமது எதிர்ப்பை வெளிப்­படுத்­தி­யுள்ளோம்.

ராஜ­ப­க் ஷக்­களின் அவ­தா­ரங்கள் அர­சாங்க செயற்­பா­டு­க­ளுக்கு இடை­யூறு செய்­வது போன்று மின் உற்­பத்தி நிலை­யங்­க­ளிலும் தமது நாச­கார வேலைகளை அரங்கேற்றி மக்­களின் இயல்பு வாழ்க்­கைக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்த முற்­ப­டு­கின்­றனர்.

இந்தச் செயற்­பா­டு­க­ளுக்கும் விரைவில் முற்­றுப்­புள்ளி வைப்போம். இவ்­வா­றான செயற்­பா­டு­க­ளி­னாலும் நாட்டை கடந்த அர­சாங்கம் கடன் குகைக்குள் தள்­ளி­விட்­டுள்­ள­தாலும் நல்­லாட்சி அரசாங்கம் துரித கதியில் பய­ணிப்­பதில் சிக்கல் நிலை தோன்­றி­யுள்­ளது. எனினும் சிக்­கல்­களை களைந்து விரைவில் நாட்டை வள­மான அபி­வி­ருத்­தியை நோக்கி நகர்த்­துவோம்.

நாம் கூறி­யது போன்று விரைவில் 10 இலட்சம் தொழில் வாய்­ப்புக்­களை உரு­வாக்­குவோம். அதனால் நாம் எமது மக்­களை கவ­னிக்­க­வில்­லை­யென கவலை கொள்ள வேண்டாம். மந்த கதியில் பய­ணித்­தாலும் வெகு­வி­ரைவில் நல்­லாட்­சியை உரு­வாக்­கிய மக்­க­ளுக்­கான பிர­தி­ப­லன்­களை பெற்­றுக்­கொ­டுப்போம் என்றார்.

Previous articleயாழில் வாள் வெட்டு ரவுடிக்கு மோட்டார் சைக்கிள் வாங்கிக் கொடுத்த சித்தி சிறையில்
Next articleநடிகை நிரோஷா தற்கொலை: கனடாவில் வசிக்கும் தமிழரை காதலித்தரா? வெளியாகிய புது தகவல்