நடிகை மற்றும் தொகுப்பாளினியுமான நிரோஷாவின் மரணம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
அவர் கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்த தாகவும் சம்பவ தினத்தன்று அவர் குறித்த நபருடன் வாக்குவாத த்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவில் வசிக்கும் நபரை நிரோஷா தீவிரமாகக் காதலித்ததாகவும், அக்காதல் கல்யாணம் வரை நிச்சயிக்கப்பட்டு , இன்னும் ஒரு மாத காலத்தில் திருமணம் என்ற நிலையில் அவர் தற்கொலை செய்துள்ளது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அதே நேரம் நிச்சயிக்கப்பட்ட காதலர், நள்ளிரவு 12 மணியளவில் நிரோஷா தன்னிடம் ஸ்கைப் அழைப்பில் சண்டை போட்டார் என்றும் தற்கொலை செய்யப் போகிறார் என்றும் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் பொலிஸார் சம்பவ இடத்தை நெருங்கும் போது நிரோஷா இறந்துவிட்டாராம்.
அவர் தங்கியிருந்த ஹொஸ்டல் அறையில் அவரது சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இதேவேளை ஸ்கைப்பில் காதலர் நேரடியாக பார்க்கும் போதே அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் சில வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.