உலகில் இலங்கைக்கு 117ஆவது இடம்

sri_lanka_eleஉலகில் மகிழ்ச்சியான நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 117ஆவது இடம் கிடைத்துள்ளது. ஐ.நா அமைப்பாகிய நிலையான அபிவிருத்தித் தீர்வுகளுக்கான வலையமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் 2016 ஆம் ஆண்டுக்கான தரப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

உலக மகிழ்ச்சி நாள் வரும் மார்ச் 20ஆம் நாள் கொண்டாடப்படுவதை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள 157 நாடுகளை உள்ளடக்கிய இந்த தரவரிசையில், சிறிலங்கா 117ஆவது இடத்தில் நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கு அடுத்து இந்தியா 118ஆவது இடத்தில் உள்ளது. அதேவேளை, தெற்காசிய நாடுகளில் பாகிஸ்தான் முன்னணியில் – 92ஆவது இடத்தில் உள்ளது. பங்களாதேஸ் 110ஆவது இடத்தில் இருக்கிறது.

உலகில் மிகவும் மகிழ்ச்சியான நாடாக டென்மார்க்கும் அதையடுத்து, சுவிற்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்தும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி முதல் பத்து இடங்களில் உள்ள நாடுகள் வருமாறு – டென்மார்க், சுவிற்சர்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, பின்லாந்து, கனடா, நெதர்லாந்து, நியூசிலாந்து, அவுஸ்ரேலியா, சுவீடன்.

Previous articleரவிராஜ் கொலை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்துக்கு மாற்றம்
Next articleயுத்தத்தின்போது காணாமற்போனோர் தொடர்பில் கொழும்பில் கலந்துரையாடல்