சிறுமியை வல்லுறவிற்குட்படுத்திய வாலிபர் கைது

imagesபுத்தளம் – திரிபெஹொ பகுதியில் 15 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி சந்தேக நபர் 21 வயதுடையவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் சிறுமியின் தாயார் வெளிநாட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றி வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிறுமியின் வீட்டில் வைத்தே சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Previous articleகலாபவன் மணி மரணமா.. கொலையா? அதிர்ச்சித் திருப்பங்கள்
Next articleயோஷித தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை! இரகசிய ஆவணங்கள் அம்பலம்