யாழ்ப்பாணம் பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு நடவடிக்கைகளின் போது பொதுமக்களின் காணிகள் ஒருபோது அபகரிக்கப்பட மாட்டாது என இந்திய துணைத்தூதுவர் நடராஜ் உறுதியளித்துள்ளார்.
இந்திய விமான ஆணையகத்தின் சென்னையை சேர்ந்த ஐவர் அடங்கிய அதிகாரிகள் குழு நேற்று(வியாழக்கிழமை) பலாலி விமான நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தது.
இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இந்திய துணைத்தூதுவர் நடராஜ், ‘பலாலி விமான நிலைய விஸ்தரிப்பிற்கென மக்களின் காணிகள் சுவீகரிக்கபடுதற்கான திட்டங்கள் இல்லை. தற்போதுள்ள விமான நிலையத்தின் அளவை மாத்திரம் வைத்து அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
அத்துடன், விமான நிலையத்திற்கென அபிவிருத்தி பணிகளுக்காக தேவைப்பட்டால் மாத்திரமே 500 மீற்றர் தொடக்கம் 800 மீற்றர் வரையான நிலப்பகுதிகள் எடுக்கப்படலாம்’ எனவும் தெரிவித்துள்ளார்.