புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் உள்ளது.
மிக விரைவில் சாட்சியின் சாட்சியம் மன்றில் பதிவு செய்யப்படும் என்று குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
வித்தியாவின் கொலை வழக்கு இன்று மீண்டும் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
இதன் போது மன்றில் தோன்றிய குற்ற புலனாய்வு பிரிவினர் குறித்த கொலை சம்பம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகின்றது.
இன்னமும் மரபனு பரிசோதனை அறிக்கை கிடைக்கப்பெறவில்லை.
மேலும் வித்தியா வன்புணர்வு க்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்தவர் உள்ளார்.
அவருடைய சாட்சியமும் மன்றில் பதிவு செய்யப்படும் என்றார்.
வித்தியா படுகொலை: பத்தாவது சந்தேகநபர் நீதிமன்றில் அழுதது ஏன்??
விளக்கமறியலில் வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்ட புங்குடுதீவு பாடசாலை மாணவி சந்தேகநபர் அழுது கொண்டு சென்றார்.
ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் மேற்படி வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பின்னர் எதிர்வரும் 28 ஆம் திகதிவரை சந்தேகநபர்கள் (10 பேர்) அனைவரும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டார்.
இதன் போது சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் நீதிமன்ற வளாகத்தின் வெளியே சந்தேகநபர்களை அழைத்து வந்தனர்.
அப்போது 10 ஆவது சந்தேகநபரான பியவர்த்தன ராஜ்குமார் என்பர் அழுது கொண்டு சென்றார்.
எனினும் இதுவரை குறிப்பிட்ட சந்தேக நபர் தொடர்பிலான அறிக்கைகளோ, முறையான குற்றச்சாட்டும் முன்வைக்கப்படவில்லை.
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட அப்பாவியென அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இவருக்காக சட்டத்தரணி ஜோய் மகிழ் மகாதேவா ஆஜராகி வாதாடி வருகின்றார்.