சின்னசேலம் எஸ்.வி.எஸ். கல்லூரி மருத்துவ மாணவிகள் 3 பேர் உயிரிழந்த வழக்கில் போலீசார் அவர்களது செல்போன்களை மீட்டுள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
சின்னசேலம் அருகே உள்ள எஸ்.வி.எஸ். கல்லூரி மாணவிகளான பிரியங்கா, சரண்யா, மோனிஷா ஆகிய மூவரும் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்தனர்.
இவ்வழக்கில் கல்லூரி தாளாளர் வாசுகி, முதல்வர் கலாநிதி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய இவ்வழக்கை விழுப்புரம் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கல்லூரி அமைந்துள்ள பங்காரம் கிராமத்தில் ஜேசிபி டிரைவர் கார்த்தி மற்றும் மாணவர் ஒருவரிடம் நடத்திய விசாரணையில் செல்போன்களை அவர்கள் எடுத்து சென்றது தெரிய வந்தது.
அவர்கள் அளித்த தகவலின் படி அருகில் இருந்த கிணற்றில் இருந்து 3 சிம்கார்டுகளையும் போலீசார் மீட்டு விசாரணையை தீவிரபடுத்தியுள்ளனர். உயிரிழந்த மாணவிகள் பயன்படுத்திய சிம்கார்டுகள் மீட்கப்பட்டது வழக்கிற்கு புதிய திருப்பத்தை தந்துள்ளது.