விக்கிலீக்ஸ் இந்த CIA ஆவணத்தை 2014ம் ஆண்டே வெளியிட்டது- தமிழ் செல்வன் கொலை என்ன நடந்தது ?

121933454tamilselvanவிடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச்செல்வன் சிறிலங்கா வான்படைக்கு சொந்தமான இஸ்ரேலிய கிபீர் விமானத் தாக்குதலில் கொல்லப் பட்டார். நவம்பர் மாதம் 2ம் திகதி 2007 அன்று கிளிநொச்சிக்கு அருகில் இருந்த இரகசிய பங்கருக்கு , துல்லியமாக குறிபார்த்து போடப்பட்ட குண்டுவீச்சில் தான் தமிழ் செல்வன் இறந்தார் என்பது அனைவரும் அறிந்த விடையம். அமெரிக்க இராணுவம் ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போரில் பயன்படுத்திய பங்கர் துளைக்கும் ,குண்டுகள் சிறிலங்கா இராணுவத்திற்கு கிடைத்தது எப்படி? தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கர் இது தானென துல்லியமான உளவுத் தகவல் வழங்கியது யார் ? இதுபோன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.

2014 ம் ஆண்டு விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணம் இந்தக் கேள்விகளுக்கு ஓரளவு பதில் வழங்கியுள்ளது. உலகம் முழுவதும் கிளர்ச்சிக் குழுக்களின் தலைவர்களை ஒழித்துக் கட்டும் அமெரிக்க ஏகாதிபத்திய நடவடிக்கையின் ஓரங்கமாகவே தமிழ்ச்செல்வன் கொலையையும் கருத வேண்டியுள்ளது. தமிழ்ச்செல்வன் தங்கியிருந்த பங்கரை காட்டிக் கொடுத்த உளவுத் தகவல் ,தலைவர் பிரபாகரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் இருந்து கிடைத்ததாக சி.ஐ.ஏ அறிக்கை தெரிவிக்கின்றது. புலிகள் இயக்கத்திற்குள் ஏற்கனவே தமிழ்ச்செல்வனுக்கும் நடேசனுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்ததாக அப்போதே புலிப் போராளிகள் மத்தியில் பேசப் பட்டது. தமிழ்ச்செல்வனின் அகால மரணத்தின் பின்னர் காவல் துறை பொறுப்பாளராக இருந்த நடேசன் அரசியல் துறை பொறுப்பாளர் ஆனார். அப்போதே புலிகளின் வீழ்ச்சியும் ஆரம்பமாகி விட்டது என்று புலிகளுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.

தலைவர்களை சிறைப் பிடித்து பின்னர் விடுதலை செய்வதால் இயக்கம் அழியப் போவதில்லை என்பது சி.ஐ.ஏ முன்வைக்கும் வாதமாக உள்ளது. ஹமாஸ் இயக்க தலைவர்களை கொலை செய்ய, அயர்லாந்தில் ஐ.ஆர்.ஏ தலைவர்களை கொலைசெய்ய , என அமெரிக்கா பல நாடுகளுக்கு உதவி புரிந்து வந்துள்ளது. இந்த வகையில் இலங்கை பாவித்த பங்கர் பேஸ்டர் எனப்படும் குண்டுகளையும் அமெரிக்காவே இலங்கைக்கு யுத்த காலத்தில் இரகசியமாக வழங்கியுள்ளது என்ற விடையம் விக்கி லீக்ஸ் வெளியிட்ட ஆவணத்தில் இருந்து தெளிவாக புரிகிறது. ‘உச்ச கட்ட பெறுமதி வாய்ந்த இலக்குகள் (ர்ஏவு) – படுகொலைத் திட்டம்’ (‘High Value Target” Assassination Program) என்று பெயரிடப் பட்ட CIA இரகசிய ஆவணம் SECRET (இரகசியம்) NOFORN (வெளிநாட்டவர் பார்வைக்கு அல்ல) என்று வகைப் படுத்தப் பட்டிருந்தது.

Previous articleமக்கள் நலக் கூட்டணி கட்சிகளின் தொகுதி பங்கீடு எப்போது ? வைகோ தகவல்
Next articleபிரபா, பொட்டம்மான் குறித்து விசாரணைகளை நடத்தி உண்மையைக் கண்டறிவோம்! அரசாங்கம்