டி20 உலகக்கிண்ண அரங்கில் புதிய வரலாறு படைத்த இங்கிலாந்து!

t20_safrica_eng_007தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து சாதனை வெற்றியை பதிவு செய்துள்ளது.
மும்பையில் நடந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்ஆப்பிரிக்கா அதிரடியாக விளையாடி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 229 ஓட்டங்களை குவித்தது.

அம்லா (58), டி காக் (52), டுமினி (54) ஆகியோர் அரைசதம் விளாசி தென்ஆப்பிரிக்க அணி இமாலய ஓட்டங்களை எட்ட உதவினர்.

பின்னர் 230 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என இங்கிலாந்து களமிறங்கியது. இந்த இமாலய இலக்கை எட்டுவது கடினம் என்ற நிலையிலும் இங்கிலாந்து பதிலடி கொடுத்து விளையாடியது.

ஜான்சன் ரோய் (43) தொடக்கத்திலே விளாசி தள்ள, அடுத்து வந்த ஜோ ரூட் அதிரடியாய் விளையாடி 83 ஓட்டங்கள் எடுத்தார். இதனால் இங்கிலாந்து 19.4 ஓவரிலே 8 விக்கெட்டுக்கு 230 ஓட்டங்கள் எடுத்து 2 விக்கெட்டால் வெற்றி பெற்றது.

இதன் மூலம் டி20 உலகக்கிண்ண அரங்கில் சிறந்த ’சேஸ்’ செய்த அணி என்ற சாதனையை இங்கிலாந்து படைத்துள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2009ல் ஜோகனஸ்பர்க்கில் நடந்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் தென்ஆப்பிரிக்கா 208 ஓட்டங்கள் இலக்கை விரட்டியதே சாதனையாக இருந்தது.

தவிர, டி20 உலகக்கிண்ண வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ஓட்டங்கள் குவித்த அணிகளின் பட்டியலில் இங்கிலாந்து 2வது இடம் பிடித்தது. முதல் இடத்தில் இலங்கை (260 ஓட்டங்கள், 2007ல் கென்யாவுக்கு எதிராக) உள்ளது.

Previous articleஉனக்கு என்ன வேண்டும், இவ்வளவு தானே- ரசிகரை துள்ளிக்குதிக்க வைத்த விக்ரம்
Next articleவிடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களது மரணம்; விசாரணைக்குத் தயாராகிறது கொழும்பு