யாழ் எழுதுமட்டுவாள் பகுதியில் தனியார் பேரூந்தை மூட்டி மோதி கவிழ்த்தது அரச பேரூந்து

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – எழுதுமட்டுவாழ் பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை 6.45 அளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கொடிகாமத்திலிருந்து கிளாலி நோக்கிப் பயணித்த மினி பேரூந்து எழுதுமட்டுவாழ் சந்தியிலிருந்து கிளாலி வீதிக்குத் திருப்புகையில், யாழிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த அரச போக்குவரத்து பேரூந்துடன் மோதியதாலே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்தில் மினி பேரூந்து குடைசாய்ந்துள்ளதோடு, அதன் சாரதி மற்றும் ஓட்டுநர் இருவரும் படுகாயமடைந்த நிலையில் கொடிகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.busbus1bus2

Previous articleவிடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களது மரணம்; விசாரணைக்குத் தயாராகிறது கொழும்பு
Next articleயாழ்.பல்கலையில் புத்தர் நாகமாக மாறினார்!