யாழ்.பல்கலையில் புத்தர் நாகமாக மாறினார்!

புத்தர் சிலை இருந்த இடத்தில், திடீரென அந்த சிலையை தூக்கிவிட்டு அந்த இடத்தில் நாகத்தின் சிலையை வைத்த சம்பவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் நேற்று இடம்பெற்றது.

இலங்கை மத்திய கலாசார நிதியம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுப் பிரிவு ஆகியன இணைந்து கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவின் தொடக்க விழா யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்று நடைபெற்றது.

கலையரங்குக்கு நுழைவாயில் அருகில் மத்திய கலாசார நிதியத்தால் கலாசார மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்கான பிரிவுக்கு வழங்கப்பட்ட சிலைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விழா ஆரம்பமாக முன்னர், அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டு வரவேற்பு இடம்போல் செய்யப்பட்டிருந்தது. விழா ஆரம்பமாக முன் ஊடகவியலாளர்கள் அந்த வரவேற்பை புகைப்படம் எடுத்தனர். விழா ஆரம்பமாகியதும் அந்த புத்தர் சிலையை அங்கிருந்து தூக்கிய ஏற்பாட்டாளர்கள், அந்த இடத்தில் நாகத்தின் சிலையை மாற்றி வைத்தனர்.

jaffna_culture_013jaffna_culture_012jaffna_culture_008

Previous articleயாழ் எழுதுமட்டுவாள் பகுதியில் தனியார் பேரூந்தை மூட்டி மோதி கவிழ்த்தது அரச பேரூந்து
Next article23ஆம் திகதி பூரண சந்திர கிரகணம்!