இராணுவத்திடமிருந்து எப்போது விடுவிக்கப்படும் கிளி. பூநகரி வைத்தியசாலை?

hoகிளிநொச்சி பூநகரியில் பொதுமக்களின் வைத்தியசாலை வளாகத்தை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்திருப்பதால் பொதுமக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கிளிநொச்சி பூநகரி வைத்தியசாலைச் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் குடிநீர் கிணறு தற்போது இராணுவத்தின் வசமே காணப்படுகின்றது.

யுத்தத்திற்கு முன்னர் பூநகரி வைத்தியசாலை, வாடியடியில் குடிநீர் வசதியுடன் அமைக்கப்பட்டது. போரின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தை இராணுவத்தினர் ஆக்கிரமித்துள்ளனர். அதுவே வைத்தியவாலைக்குப் பொருத்தமான காணி என்று பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர்.

தற்போது பூநகரி வைத்தியசாலைக்கான குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் வைத்தியசாலை பெரும் சிரமங்களுக்கு உள்ளாகுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விடயம் தொடர்பில் குறித்த இராணுவ முகாம் அதிகாரிக்கு சுட்டிக்காட்டி கடிதம் எழுதவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇராணுவத்தளம் அமைக்க சீனாவுக்கு இடமளியோம் இலங்கை எச்சரிக்கை
Next articleநாயகி நயன்தாராவிற்கு தற்போது மூன்று?