நாயகி நயன்தாராவிற்கு தற்போது மூன்று?

nayantharaதெலுங்கு திரையுலகின் ஜாம்பவான்; சிரஞ்சீவியின் நூற்றைம்பதாவது திரைப்படம் எப்போது? என்ன? என்று காத்திருந்த ரசிகர்களுக்கு இனிப்பான சேதி காதுகளுக்கு எட்டியுள்ளது. பிரம்மாண்டமான கூட்டணி! மிகப் பெரிய பட்ஜட் செலவில் முன்னணி கலைஞர்கள் கைகோர்க்கின்றனர் இந்தத் திரைப்படத்தில்.

சிரஞ்சீவியின் மகன் ராம் சரன், லைகா நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்தப் புதிய திரைப்படத்தினை வி.வி.வினாயக் இயக்குகின்றார். இந்த புதிய திரைப்படத்தின் நாயகி தேர்வு அண்மையில் நடைபெற்றுள்ளது.

நாயகியாக நடிப்பதற்கு நயன்தாரா கேட்கப்பட்டுள்ளார், திரைப்படத்தில் ஒரு இடத்தில் பிகினியுடன் நயன் தோன்ற வேண்டிய காட்சியொன்று உள்ளதாக படக்குழு தெரிவித்திருக்கிறது.

‘அப்படியா அப்படி என்றால் வழமையான சம்பளத்தினை விட ஒரு கோடி அதிகமாக தாருங்கள்’ என்று மிகக் கூளாக தெரிவித்தாராம்… இதற்கு தயாரிப்பு நிறுவனமும் சம்மதம் சொல்லிவிட்டதாம்.

வழமையான சம்பளமே இரண்டு கோடி, அதில் இன்னும் ஒரு கோடி அதிகம் என்றால் நயன் தற்போது வாங்கும் சம்பளம்; 3 கோடி!

ஆக தென்னிந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்ற நிலையை, தொடர்ந்தும் தக்க வைத்திருக்கிறார் நயன்.
எப்படியோ! ‘நல்ல வேளை, பில்லா ரீமேக் முன்கூட்டியே எடுத்தாயிற்று’ என்று இயக்குனர் விஷ்ணுவர்தன் மகிழ்ந்திருப்பார்.

Previous articleஇராணுவத்திடமிருந்து எப்போது விடுவிக்கப்படும் கிளி. பூநகரி வைத்தியசாலை?
Next articleதற்கொலை அங்கியடன் பிரபாகரனை மே 19 கடைசியாக பார்த்தேன்….! முன்னாள் போராளியின் புதுப்புரளி