டி20 உலகக்கிண்ண போட்டி! சாம்பியன் அணியின் பரிசுத் தொகை 24 கோடி

Capture63-590x200டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் உள்ள எட்டு முக்கிய நகரங்களில் நடைபெற்று வருகின்றன.
தற்போது 10 அணிகள் சூப்பர் 10 சுற்றில் பங்கேற்று வருகின்றன. இதில் இருந்து அரையிறுதிக்கு 4 அணிகள் முன்னேறும்.

இந்நிலையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் அணிகள் ஏப்ரல் 3ம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதவுள்ளன.

இதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 24 கோடி ரூபா பரிசுத் தொகையாக கிடைக்கும்.

இது கடந்த தொடரை விட 5.70 கோடி ரூபா அதிகமாகும்.

அதேபோல் இறுதிப் போட்டியில் தோற்கும் அணிக்கு 10.3 கோடி ரூபாவும், அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளுக்கு 5.14 கோடி ரூபாவும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது.

Previous article2015 ஆம் ஆண்டு கா.பொ.த.சாதரணதர பரீட்சை முடிவுகள் வெளியாகின
Next articleஏழு வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை: 2 சிரியா அகதிகளுக்கு குவியும் பாராட்டு