முன்பள்ளி ஆசிரியை படுகொலை: காட்டுக்குள் நடந்தது இதுதான்…?

rape-case-in-ambalangodaமொனராகல-உலந்தாவ,கிவுலேயார பிரதேசத்தில் நேற்றைய தினம் அதிகாலை காணாமல் போனதாக கூறப்பட்ட ஆசிரியை ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

54 வயதான இவர் முன்பள்ளி ஒன்றின் ஆசிரியர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவரை காணவில்லை என்று இவரது சகோதரி மொனராகல பொலிஸசாரிடம் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இவரது சடலம் இன்று காலை கெலேபந்த பிரதேசத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆசிரியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொனராகல பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleபாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டம்: கோஹ்லி அதிரடியில் வீழ்ந்தது பாகிஸ்தான்!
Next articleபு­லி­களின் டொலர்கள், தங்கம் உள்ளது. குறைந்த விலையில் தருகிறோம்: கொள்ளைக்­ குழு