பு­லி­களின் டொலர்கள், தங்கம் உள்ளது. குறைந்த விலையில் தருகிறோம்: கொள்ளைக்­ குழு

ltte-goldவிடு­த­லைப்­ பு­லி­களின் டொலர்கள், தங்கம் என்­பன தம்­மிடம் உண்­டெ­னவும் அவற்றை குறைந்த விலையில் தரு­வ­தா­க வும் கூறி வங்கி முகா­மை­யாளர் ஒரு­வரை ஏமாற்றி ஆறு இலட்சம் ரூபாவை கொள்­ளை­ய­டித்த குழு­வினை திரு­கோ­ண­மலை பொலிஸார் மடக்­கிப்­ பி­டித்­துள்­ளனர்.

இச்­சம்­பவம் தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

பண­மோ­சடி கொள்­ளையில் நீண்ட கால­மாக ஈடு­பட்­டு­வந்த குழு ஒன்று தோப்­பூரைச் சேர்ந்த வங்­கி­யொன்றின் முகா­மை­யா­ள ரைத் தொடர்­பு­கொண்டு விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு சொந்­த­மான டொலர்கள் எம்­மிடம் உள்­ளன. இதை குறைந்தவிலைக்கு உங்­க­ளுக்கு தரு­கிறோம்.

ஆறு இலட்சம் ரூபா பணத்­துடன் வாருங்கள் என்று கூறி ஹோட்டல் ஒன்றின் முக­வ­ரி­யையும் கொடுத்­துள்­ளனர்.

குறித்த முகா­மை­யா­ளரும் ஆறு இலட்சம் ரூபா பணத்­துடன் ஹோட்­ட­லுக்கு வந்­த­போது அவரை அறையில் வைத்து பூட்­டி­விட்டு அவ­ரிடம் இருந்த ஆறு இலட்சம் ரூபா­வையும் கொள்­ளை­ய­டித்­த­துக்­கொண்டு கொள்ளை கோஷ்­டி­யினர் தப்பிச் சென்­றுள்­ளனர்.

இது தொடர்­பான முறைப்­பாடு பொலி­ஸா­ருக்கு கிடைத்­த­தை­ய­டுத்து திரு­கோ­ண­மலை தலைமைப் பொலிஸ் அதி­காரி மகேஸ் குமா­ர­சிங்க மேற்­படி கொள்­ளை­யர்­களை அவர்கள் வந்த காருடன் மடக்­கிப்­பி­டித்­துள்ளார்.

இது தொடர்பில் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்த வட்­ட­கொடை எனும் இடத்தைச் சேர்ந்த கதி­ரவேல் ராஜ­கோபால், முத்­துக்­குமார் சிவா­னந்­த­ராஜா, ரம்­பொ­டையைச் சேர்ந்த செல்­லத்­துரை சுப்­ர­ம­ணியம், பிட்­ட­மா­று­வையைச் சேர்ந்த வீரப்பன் ரவிக்­குமார், திரு­கோ­ண­மலை செல்­வ­நா­ய­க­பு­ரத்தைச் சேர்ந்த முத்­து­ராஜா சுதா­கரன், விஸ்ணு ஜெயகாந்த், நிலா­வளி இறக்­கக்­கண்­டியைச் சேர்ந்த ராசீக் முகமட் ஹஸன் ஆகிய ஏழு பேரையும் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதவான் ரி.சரவணராஜா மேற்படி ஏழு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Previous articleமுன்பள்ளி ஆசிரியை படுகொலை: காட்டுக்குள் நடந்தது இதுதான்…?
Next articleசிறந்த விமான நிலைய வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர்