சிறந்த விமான நிலைய வரிசையில் முதல் இடத்தில் சிங்கப்பூர்

Changi-International-Airportசர்வதேச அளவில் இந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த விமான நிலையங்கள் பட்டியலில் சிங்கப்பூர் சாங்கி சர்வதேச விமான நிலையம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இங்கிலாந்தின் ஸ்கைட்ராக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் உள்ள விமான நிலையங்களின் பராமரிப்பு, பயணிகளுக்கான வசதிகள், பாதுகாப்பு போன்றவற்றின் அடிப்படையில், இந்த பட்டியலை ஸ்கைட்ராக்ஸ் ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. இதற்காக இம்முறை உலக அளவில் லட்சக்கணக்கான பயணிகளிடம் 9 மாதங்களாக நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின்படியே இந்த பட்டடியல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை சியோல் இன்சியோன் சர்வதேச விமான நிலையமும், மூன்றாவது இடத்தை மூனிச் விமான நிலையமும் பெற்றுள்ளன. அதேபோன்று டோக்யோ ஹனேடா 4வது இடத்திலும், ஹொங்காக் சர்வேதச விமான நிலையம் 5வது இடத்திலும் உள்ளன.

வளைகுடா நாடுகளில் கத்தாரின் தோஹா ஹமத் விமான நிலையம் 10 வது இடத்தையும், துபாய் சர்வதேச விமான நிலையம் 26வது இடத்தையும், அபுதாபி விமான நிலையம் 38வது இடத்தையும் பெற்றுள்ளன.

Previous articleபு­லி­களின் டொலர்கள், தங்கம் உள்ளது. குறைந்த விலையில் தருகிறோம்: கொள்ளைக்­ குழு
Next articleமுகமாலை சமரில் 150ற்கு மேற்பட்ட அதிகாரிகள், படையினரை இழந்தோம்! பொன்சேகா