கொமடி நடிகர் சிங்கமுத்து அதிமுக சார்பில் விருகம்பாக்கம், மதுரவாயல், திருப்பத்தூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளார்.
இந்நிலையில், தேமுதிக கூட்டணி விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்புகையில், விஜயகாந்த் இன்னும் சினிமாவில் இருந்தே வெளியே வரவில்லை. கட்சி ஆரம்பித்த 10 ஆண்டுகளில் அவர் மக்கள் பணி என்று எதைச் செய்தார்? அவருடைய எம்எல்ஏக்களும் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
ஆனால், முதல்வர் ஆசை மட்டும் விஜயகாந் துக்கு இருக்கிறது. அது நடக் காது. முதலில் அவர் பேசுவது அவருக்கே புரியுமா என்று கேளுங்கள்.
அவருக்கு வரும் கூட்டத்தை வைத்து கணக்கு போடக்கூடாது. பொதுக்கூட்டத்துக்கு வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறும் என்று அவர் நினைக்கிறார்.
சினிமாவில் கொமடி படம் என்றால் கூட்டம் கூடும். அதுபோலத்தான் விஜயகாந்த் பேசுவது செம கொமடியாக இருக்கும் என்று மக்கள் போகிறார்கள் எனக்கூறியுள்ளார்.