நேர் மேல் திசையில் சூரியன் பயணிப்பதால் ஸ்ரீலங்காவின் வெப்ப காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்!

11111நாட்டில் நிலவியுள்ள வெப்ப காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்காவின் நேர் மேல் திசையில் சூரியன் பயணிப்பதால் வெப்பமான காலநிலை எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை தொடரும் எனவும் நாட்டில் வெப்பநிலை பகல்வேளையில் 3 பாகை செல்ஸியஸ் ஆகவும் இரவில் 2 பாகை செல்ஸியஸ் ஆகவும் அதிகரித்துள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வெப்பநிலை 26.5 பாகை செல்ஸியஸிற்கும் 28 பாகை செல்ஸியஸிற்கும் இடையில் வேறுபடுவது வழமையானபோதிலும். அதிக வெப்பம் உணரப்படுவதற்கு எல்நினோ வெப்பம் காரணமாக இருக்கலாம் எனவும் பூகோள வளிமண்டல சுழற்சி காரணமாக நாட்டில் வீசும் காற்று உலர்ந்ததாக காணப்படுவதாகவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் எதிர்வரும் வாரமளவில் பருவ இடை மழை பெய்வதற்கு சாத்தியக்கூறு காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் அனைத்து பகுதிகளிலும், வெப்பமான கால நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleசாதனை பட்டியலில் ஜெயம் ரவியும் இணைந்தார்
Next articleயாழில் மிதிவெடிகள் மீட்பு