யாழில் மிதிவெடிகள் மீட்பு

13யாழ்ப்பாணம் கொழும்புத்துறை பகுதியில் காணியொன்றில் இருந்து இரண்டு மீதிவெடிகள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளன. கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியில் இருந்த தனியார் காணியொன்றில் இருந்தே மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளன

குறித்த பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டிருந்தது. இதன் பின்னர் இரண்டு நாட்கள் பின்னர் காணியை துப்பரவு செய்யும் போது மீதி வெடியொன்று வெடித்து ஒருவர் காயமடைந்திருந்தார்.

இந்நிலையிலேயே இன்றைய தினம் குறித்த பகுதியில் விசேட அதிரடி படையினர் மற்றும் குண்டு செயலிழக்க செய்யும் பிரிவினர் இணைந்து வெடிபொருட்களை மீட்கும் பொருட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது மிதிவெடிகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநேர் மேல் திசையில் சூரியன் பயணிப்பதால் ஸ்ரீலங்காவின் வெப்ப காலநிலை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும்!
Next articleமகிந்தவின் ஊரில் ஒருவரைத் நபரைத் தேடி இன்டர்போல் வலைவீச்சு