போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரிக்க அனுமதியோம் – சம்பிக்க ரணவக்க

sri-lanka-armyஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தில் இருக்கும் வரையில், எந்தவொரு சூழ்நிலையிலும், போர்வீரர்களை அனைத்துலக சமூகம் விசாரணை செய்ய அனுமதிக்காது என்று அந்தக் கட்சியின் தலைவரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் நேற்று நடந்த ஜாதிக ஹெல உறுமயவின் மக்கள் மன்றம் நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“தற்போதைய அரசாங்கம் இன்னமும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. தற்போதைய அரசாங்கத்தின் முற்போக்கான நகர்வுகளுக்கு முன்னைய ஆட்சியாளர்கள் இன்னமும் இடையூறு செய்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு இரண்டு தேர்தல்களில் மக்களால் தோற்கடிக்கப்பட்ட பின்னரும், ராஜபக்ச ஆட்சிக்காலத்து தலைவர்களால் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை.

அவர்கள் இந்த நாட்டை தமது தனிப்பட்ட சொத்தாக நினைக்கின்றனர்.எப்படியாவது அதிகாரத்துக்கு வர முனைகின்றனர்.

இரண்டு தேர்தல்கள் நடக்கவுள்ள, 2020ஆம் ஆண்டு முக்கியமான ஒன்றாக இருக்கும்.

அடுத்த நாடாளுமன்றத்தை யார் அமைப்பது, அடுத்த அதிபராக யாரைத் தெரிவு செய்வது என்று ஜாபதிக ஹெல உறுமயவும் ஏனைய பரந்துபட்ட சிந்தனையுள்ள சக்திகளும் தீர்மானிக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Previous articleபிரான்சில் தமிழர் மீது சரமாரித் தாக்குதல் ஆபத்தான கட்டத்தில்
Next articleமூடப்பட்ட டீசல் மின் உற்பத்தி நிலையங்களை மீளத்திறக்க அரசாங்கம் திட்டம்