காவலன் பட காமெடியான விஜய்யின் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா பேச்சு

news_05-03-2016_56VAA“நெருப்புல சுட்டா ஆறிடும், வெறுப்புல திட்டினா ஆறாதுன்னு ஒரு காலத்துல கண்ணதாசனே சொல்லியிருக்காரு பாஸ்… அது கண்ணதாசா இல்ல ஜேசுதாசா…” இதை படிச்ச உடனே எந்த படம்னு உடனே தெரிஞ்சிருக்குமே… ஆம் காவலன் படத்துல வடிவேலு அடிச்ச காமெடி கலாட்டாதான் இது. சரி இப்ப இந்த வசனத்துக்கும் இந்த செய்திக்கும் என்ன சம்பந்தம்னு யோசிக்கிறவங்க அடுத்த பாராவை விறுவிறுப்பாக படிக்கவும்..

விஜய், சமந்தா, எமி ஜாக்சன், நைனிகா, ராஜேந்திரன், பிரபு, ராதிகா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கும் படம்தான் தெறி. இயக்குநர் அட்லீ இயக்க, கலைப்புலி எஸ்.தாணு இப்படத்தை தயாரித்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் வரலாற்றையே விஜய் தவறாக சொன்னது எத்தனை பேருக்கு தெரியும்.

தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் சமந்தாவை தவிர அனைவரும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் விஜய் பேசும்போதுதான் இந்த வரலாற்று நிகழ்வு நடந்தது.

விழாவில் பேசிய விஜய், “ரஷ்யா முன்னாள் அதிபர் மாவோ என்று ஒரு சிறிய கதையை சொன்னார். சொன்ன கதையெல்லாம் நல்லாதான் இருந்திச்சு, கதையை கேட்ட பல 100 கைகளும் தட்டி விஜய்யை என்கரேஜும் செஞ்சிச்சு. ஆனால் பொருமையாக உட்கார்ந்து யோசிக்கும்போதுதான் விஜய் பேசியதில் எவ்வளவு பெரிய தவறு இருக்கிறது என்பது தெரிய வந்தது.

ஆமாங்க, விஜய் சொன்ன அந்த ரஷ்ய முன்னாள் அதிபர் மாவோ என்பவர் சீனாவின் முன்னாள் அதிபர். இப்படி வரலாற்றை தெரிஞ்சோ தெரியாமலோ மாற்றி சொல்லிட்டாரு விஜய். இந்த விழாவை எக்ஸ்ளூசிவ் கவரேஜ் செய்த பிரபல தொலைக்காட்சி மேலாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் விஜய் பேசிய அந்த வசனத்தை மட்டுமாவது கட் செய்து ஒளிபரப்புங்கள் புண்ணியமா போகும்.

இப்போ புரியுதா எதுக்கு காவலன் பட காமெடி வசனத்தை முதல் பேராவில் டைப் செய்தேன் என்று..

—- ஸ்ரீனிவாஸ்…

Previous articleகனடா கடல் பகுதியில் எரிவாய் எடுக்க திட்டமிடும் அமெரிக்கா: வலுக்கும் எதிர்ப்புகள்
Next articleபீட்ஸ்சா ஆடர் செய்ததால் மாட்டிக்கொண்ட பாரிஸ் தீவிரவாதி: கசியும் உண்மைகள்…