பீட்ஸ்சா ஆடர் செய்ததால் மாட்டிக்கொண்ட பாரிஸ் தீவிரவாதி: கசியும் உண்மைகள்…

1625494757325E6EF300000578-3500011-image-a-30_1458416897856உலகமே வலைவீசி தேடிய தீவிரவாது , பீட்சா ஒன்ற ஆடர் செய்து வசமாக மாட்டிக்கொண்டது எப்படி ? இதோ புலனாய்வு தகவல்கள்… அதிர்வின் வாசகர்களுக்ககாக.. கடந்த நவம்பர் மாதம் 13ம் திகதி பாரிஸ் நகரில் நடந்த பாரிய தாக்குதலில் 130 பேர்வரை கொல்லப்பட்டார்கள். இதனை நடத்திவிட்டு , பொலிசார் கண்களில் மண்ணை தூவிவிட்டு பெல்ஜியம் தப்பிச் சென்றவர்தான் “சலா அப்டசலாம்”. இவர் பெல்ஜியம் சென்றிருக்கலாம் என்று நம்பப்பட்டாலும் அவர் அங்கிருந்து வெறு நாட்டுக்கு சென்றிருக்க வாய்ப்புகள் உள்ளதாக கருதப்பட்டது. இன் நிலையில் தான் கடந்த வாரம் அவரை உயிரோடு பிடித்தார்கள் பெல்ஜியப் பொலிசார்.

பாரிஸ் தாக்குதல் நடைபெற்று சில நிமிட நேரத்தில் எல்லாம் அங்குள்ள பிரான்ஸ் டெலிகொம் அனைத்து மோபைல் தொலைபேசி உரையாடல்களையும் உடனே பதுவுசெய்ய ஆரம்பித்து விட்டார்கள். அதிலும் குறிப்பாக பாரிஸ் நகரில் யார் யார் அன்றைய தினம் (அன் நேரம்) மோபைல் போனை பாவித்து பேசினார்களோ அனைவரது உரையாடலும் பதிவில் இருந்துள்ளது. இதில் சகோதரர் இறந்த பின்னர் அப்டசலாம் யாருடனோ பேசியுள்ளார். இவரது குரலும் பதிவாகி இருந்துள்ளது. இதனை கண்டு பிடித்த பாரிஸ் பொலிசார், அந்தக் குரலை தேடி வந்துள்ளார்கள். இன் நிலையில் தான் அப்டசலாம் தங்கியிருந்த வீட்டை பிரெஞ்சுப் பொலிசார் சுற்றுவளைத்துள்ளார்கள்.

அன் நேரம் அவர் எதுவித பதற்றமும் இன்றி, வீட்டில் உள்ள ஒரு அலுமாரியில் ஒளிந்து இருந்துள்ளார். பொலிசாரும் இதனை கவனிக்கவில்லை. பின்னர் வீட்டில் உள்ள அனைத்துப் பொருட்களையும் , ஒரு தனியார் நிறுவனம் ஒன்றின் ஊடாக அப்புறப்படுத்தி. அனைத்தையும் பொலிஸ் நிலைய குடோனுக்கு கொண்டு சென்றுள்ளார்கள். அப்போது கூட அப்டசலாம் அந்த அலுமாரிக்கு உள்ளே தான் இருந்துள்ளார். பின்னர் அதில் இருந்து தப்பித்தே பெல்ஜியம் நாட்டுக்குள் சென்றுள்ளார்.

பெல்ஜியத்தில் கடந்த 4 மாதங்களாக அவர் வசித்து வந்துள்ளார். ஆனால் அவரை எவரும் அடையாளம் கண்டு பிடிக்கவில்லை. இதுபோக அப்டசலாம் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தை அடிக்கடி கடந்து செல்வது வழக்கமாம். பொலிசார் கூட இவரை அடையாளம் காணவில்லை. இன் நிலையில் தான் பிரெஞ்சு பொலிசார் கொடுத்த ஒலி (ஆடியோ) மாதிரியை வைத்து பெல்ஜியம் பொலிசார் ரெலிகொம் ஊடாக தேடிவந்தார்கள். பெல்ஜியத்தின் தலைநகரான பிரசில்ஸில் உள்ள ,மெலோன் பெக் என்னும் இடத்தில் அப்டசலாம் வசிப்பதும். அவர் மோபைல் தொலைபேசி பாவிப்பதும் பெல்ஜியம் பொலிசாரால் கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து பொலிசார் குறித்த இடத்தை நோட்டமிட்டு வந்தார்கள். ஆனால் அப்டசலாம் அங்கே இருக்கிறாரா இல்லையா என்று தெரியவில்லை.

அவர் வீட்டில் இல்லாதவேளை விட்டை சுற்றிவளைத்தால். அது போன்ற முட்டாள்தனமான விடையம் வேறு எதுவாகவும் இருக்க முடியாது. பின்னர் அப்டசலாம் அங்கிருந்து மீண்டும் எஸ்கேப் ஆகிவிடுவார். இன் நிலையில் தான் கடந்த வாரம் அருகில் உள்ள பீட்சா நிலையம் ஒன்றுக்கு அப்டசலாம் போன் செய்து நிறைய பீட்சாவை ஆடர் செய்துளார். அவர் கூறிய தொகையை வைத்தே, உள்ளே எத்தனை பேர் இருப்பார்கள் என்று பொலிசார் கணக்குப் போட்டு விட்டார்கள். பீட்சா டிலிவரி செய்யும் நபரும் பீட்சாவை கொண்டுபோய் கொடுத்துவிட்டு வந்துவிட்டார். இன் நிலையில் தான் பொலிசார் தமது அதிரடிப்படையினரை களம் இறக்கினார்கள். பெரும் துப்பாக்கிச் சண்டைக்கு மத்தியில் , வீட்டில் இருந்து தப்பிய அப்டசலாமை காலில் சுட்டு பிடித்தார்கள் பொலிசார்.

வைத்தியசாலையில் இருந்து கடந்த வெள்ளி அவரை விடுவித்துள்ள பொலிசார் தமது பிடியில் வைத்து விசாரித்து வருகிறார்கள். தான் பெல்ஜியம் பொலிசாருக்கு உதவ தயார் என்றும். ஆனால் தன்னை பிரான்சுக்கு நாடு கடத்தவேண்டாம் என்றும் அப்டசலாம் கோரியுள்ளார். ஆனால் பிரான்சும் பெல்ஜியம் நாடும் உடன் பிறவா சகோதரர்கள் மாதிரி. நாடு கடத்தாமல் விடுவார்களா என்ன ? விரைவில் அப்டசலாம் பிரான்ஸ் நாட்டுக்கு நாடு கடத்தப்பட உள்ளார்… இனி என்ன நடக்கும் என்பது தொடர்பான செய்திகளும் விரைவில் வெளியாக உள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்

Previous articleகாவலன் பட காமெடியான விஜய்யின் தெறி படத்தின் இசை வெளியீட்டு விழா பேச்சு
Next articleநாமலுக்கு ரூ 450 மில். கமிஷன் வழங்கப்பட்டமை தொடர்பில் விசாரணை