இலங்கையை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!

237617.3-670x377பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடக்கும் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும், இலங்கை அணியும் விளையாடின.

7.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. திஷ்னும், சந்திமலும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள். நடுவரின் தவறான முடிவால் தில்ஷன் 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இலங்கையின் முக்கிய பேட்ஸ்மேனான சந்திமல் 12 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

இதனை அடுத்து வந்த வீரர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழக்க இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 122 ரன்கள் எடுத்தது. பெரேரா அதிகப்பட்சமாக 40 ரன்கள் எடுத்தார். வெஸ்ட் இண்டீஸ் லேக் ஸ்பின்னர் பத்ரி 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

பலமான வெஸ்ட் இண்டீஸ் அணி 123 ரன்களை எளிதாக விரட்டி பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. இலங்கை இன்னிங்சின் கடைசி கட்டத்தில் பீல்டீங் செய்யாத கிறிஸ் கெயிலை தொடக்க ஆட்டகாரர் களமிறங்க நடுவர்கள் அனுமதிக்கவில்லை. இதனை அடுத்து பிளச்சரும், சார்லசும் தொடக்க ஆட்டகாரர்களாக களமிறங்கினார்கள்.

சார்லஸ் 10 ரன்னில் ஆட்டமிழந்தார். ஆனால் பிளட்சர் தூண் போல் நின்று சிக்சரும், பவுண்டரியும் அடித்து அந்த அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார். ஆந்த்ரே ரசல் தனது பங்குக்கு 8 பந்தில் 20 ரன்கள் அடித்தார். வெஸ்ட் இண்டீஸ் 18.3 ஓவரில் 127 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில் 84 ரன்கள் குவித்த பிளட்சர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Previous articleபரீட்சையில் சித்தியடையாததால் மாணவி தற்கொலை
Next articleஅன்று தொப்புள்கொடியுடன் நாய் துாக்கிய குழந்தை இன்று