அன்று தொப்புள்கொடியுடன் நாய் துாக்கிய குழந்தை இன்று

பெற்ற தாயால் கைவிடப்பட்டு தொப்புள்கொடியுடன் குப்பைத்தொட்டியில் கிடந்த அனாதை குழந்தையை காப்பாற்றிய தெருநாயைப் பற்றிய செய்திகள் கைவிட்ட அந்த தாயைவிட, உயிர்கொடுத்த அந்த நாயே கண்கண்ட தெய்வம் என்ற புதிய அகராதியை உருவாக்கியுள்ளது.

முன்னர் வந்த செய்திகளின்படி, இந்த சம்பவம் பிரேசில் நாட்டிலுள்ள காம்பினாஸ் நகரில் கடந்த ஆண்டு நடைபெற்றதாகவும், பின்னர்வந்த இன்னொரு இணையதள செய்தியில் மேற்படி சம்பவம் வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் நடந்ததாகவும் பதிவாகியுள்ளது.

எங்கே, எப்போது நடந்தபோதும், ஆறறிவுகொண்ட மனிதர்களால் விரட்டியடிக்கப்படும் ஐந்தறிவு உயிரினமான தெருநாய்கள் மனிதர்களைவிட மேன்மையானவைதான் என்பதை இந்த நாய் நிரூபித்துள்ளது.

சாதாரணமாக, நாய்களும் பூனைகளும் ரத்தம்போன்ற நீசநாற்றம் அடிக்கும் பொருட்களை இரையாக்கிக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டும் என நம்பப்பட்டு வருகிறது. ஆனால், ரத்தமும் சதையுமாக, தொப்புள்கொடிகூட அறுபடாமல் குப்பைத்தொட்டியில் அனாதையாக கிடந்த அந்த ஆண்குழந்தையின் உடலில் தனது பல்கூட பதியாத வகையில் அழகாக வாயால் கவ்விக்கொண்டுவந்த அந்த நாய், அருகாமையில் உள்ள ஒருவீட்டின் வாசலில் குழந்தையை கிடத்திவிட்டு குரல் கொடுத்துள்ளது.

விரைந்து வெளியேவந்த வீட்டின் உரிமையாளர்கள் உடனடியாக அந்த குழந்தையை அருகாமையிலுள்ள ஆஸ்பத்திரிக்கு தூக்கிச்சென்று, முதலுதவி அளித்து, உயிர்பிழைக்க வைத்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது சில வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.dog

dog01

Previous articleஇலங்கையை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ்!
Next articleசாவகச்சேரி – சரசாலை பகுதியில் மாட்டுவண்டிச் சவாரி