சாவகச்சேரி – சரசாலை பகுதியில் மாட்டுவண்டிச் சவாரி

savakasare1-600x338யாழ். மாவட்ட சவாரிச் சங்கத்தின் அனுசரணையுடன் சாவகச்சேரி – சரசாலை வடக்கு சனசமூக நிலையமும், சரசாலை கமக்கார அமைப்பும் இணைந்து நடத்திய மாட்டுவண்டிச் சவாரிப்போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை சரசாலை வடக்கு குருவிக்காட்டுத் தரவையில் இடம்பெற்றது.

இந்த சவாரியில், வட பகுதியிலுள்ள அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களின் காளைகளும் பங்கெடுத்திருந்திருந்தன.

யுத்தத்தின் காரணமாக தடைப்பட்டுப் போயிருந்த மாட்டுவண்டிச் சவாரிப் போட்டிகள் 28 வருடங்களின் பின்னர் குறித்த பிரதேசத்தில் இன்றைய தினம் கோலாகலமாக இடம்பெற்றது.

A,B,C,D என நான்கு பிரிவுகளாக இடம்பெற்ற போட்டியில், A பிரிவில் மாதகலைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரும், B பிரிவில் விசுவமடுவைச் சேர்ந்த கிரிசாந் என்பவரும், B பிரிவில் வட்டக்கச்சியைச் சேர்ந்த வேளாண்கிள்ளி என்பவரும், D பிரிவில் அத்தாயைச் சேர்ந்த பாப்பா என்பவரும் முதலிடங்களைப் பெற்றுக்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஅன்று தொப்புள்கொடியுடன் நாய் துாக்கிய குழந்தை இன்று
Next articleஉள்ளக பொறிமுறையின் இறுதி வடிவம் மே மாதத்தில்