யாழில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞர்

cild-jaகோப்பாய் பகுதியைச் சேர்ந்த சிறுமியைக் காதலிப்பதாக கூறி கடத்திச் சென்று குடும்பம் நடாத்திய 23 வயதாக இளைஞனைப் பருத்தித்துறைப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

சிறுமியின் பெற்றோர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். சிறுமியையும் இளைஞனையும் பொலிசார் தேடி வந்த போது பருத்தித்துறைப் பொலிசாருக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம் இளைஞனையும் சிறுமியையும் பொலிசார் கைது செய்திருந்தனர்.

இருவரும் மேலதிக விசாரணைக்காக கோப்பாய் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது இளைஞன் நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்தப்பட்ட போது குறித்த இளைஞளை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Previous articleயாழின் சிறப்பான ஒடியல் கூழ்
Next articleதனது மகளை கொலை செய்ய மஹிந்த சதி : சந்திரிகா அதிர்ச்சி தகவல்