தனது மகளை கொலை செய்ய மஹிந்த சதி : சந்திரிகா அதிர்ச்சி தகவல்

mahinda_and_chandrikaதனது மகளான யசோதாவை கொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சதித் திட்டம் தீட்டியிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

களனி ஹூனுப்பிட்டியில் நேற்று நடைபெற்ற சுதந்திர கட்சியின் உறுப்பினர்களுடனான சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

மேலும், கடந்த 9 ஆண்டுகளாக தான் அரசியலிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருந்ததாகவும், கட்சியிலிருந்த அனைவருக்கும் தன்னுடன் பேசுவதற்கு மஹிந்த தடை விதித்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி இன்னும் ஒருவருடம் தொடர்ந்திருந்தால் நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சியில் வீழ்ந்திருக்கும். அரச சேவையாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

மஹிந்த ராஜபக்ஷவின் 13 பேர் அடங்கிய குழு ஒன்று தன்னை அரசியலிலிருந்து விரட்டியடிக்கும் நோக்கில் செயற்பட்டது.

தற்போதைய அரசாங்கத்திலும் திருடர்கள் சிலர் இருப்பதாகவும் இது வரைகாலமும் பொறுமையுடன் செயற்பட்டு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது கடுமையான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Previous articleயாழில் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியுடன் குடும்பம் நடாத்திய இளைஞர்
Next articleஅணு ஆயுத சோதனையால் மிரட்டும் வட கொரியா அதிபர் எப்படியிருக்கிறார்?