அணு ஆயுத சோதனையால் மிரட்டும் வட கொரியா அதிபர் எப்படியிருக்கிறார்?

kim_jong_002வட கொரியா அதிபர் கிம் ஜாங்கின் உடலில் ஏற்பட்டு சிறுமாற்றத்தை அந்நாட்டு ஊடகங்கள் புகைப்படம் எடுத்து செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா தொடர்ந்து உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. சபையின் தீர்மானங்களையும் பொருட்படுத்தாமல் அணு ஆயுத திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

3 முறை அணுகுண்டு சோதனை, ஒரு முறை ஹைட்ரஜன் குண்டு சோதனை, தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகள் நடத்தி வடகொரியா அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு தண்டனையாக ஐ.நா. சபை கடுமையான பொருளாதார தடைகளை அந்த நாட்டின் மீது விதித்துள்ளது. அமெரிக்காவும் பொருளாதார தடைகளை விதித்தது.

ஆனால், இதற்கெல்லாம் வடகொரிய அதிபர் அஞ்சியதாக தெரியவில்லை, இந்நிலையில் அவர் தனது நாட்டு இராணுவ வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை பார்வையிட்டுள்ளார்.

இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அதிபரின் உடலில் இரண்டு மாற்றங்கள் ஏற்பட்டுள்ள என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த முறை அவர் அணிந்திருந்த ஆடை அவர் உடலை முழுவதுமாக மறைத்திருந்தது, இதனால் அவர் எடை அதிரித்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

அவருக்கு தொப்பை வைத்துள்ளது மட்டுமின்றி, அவரது கன்னம் பெரிதாகி பார்ப்பதற்கு இரட்டை கன்னங்கள் போன்று இருக்கின்றன.

இதனால் அவர் உடல் எடை அதிகரித்துவிட்டார் என ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன, வடகொரியாவில் 1994 முதல் 1998 வரை நிலவிய பஞ்சம் தற்போது வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

கடந்த ஆண்டு வடகொரியாவில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக, 50 சதவீதம் நீர்த்தேக்கங்கள் வற்றிவிட்டன என்று ஐநா அமைப்பு தெரிவத்திருந்தது, மேலும் 1994 ஆம் ஆண்டில் 5 மில்லியன் மக்கள் பசியால் வாடினர், இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் 10.4 மில்லியனாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Previous articleதனது மகளை கொலை செய்ய மஹிந்த சதி : சந்திரிகா அதிர்ச்சி தகவல்
Next articleதுடுப்பாட்ட செய்தி மைதானத்திற்குள் ஏன் போகிறாய்? கிறிஸ் கெய்லை இழுத்துச் சென்ற நடுவர் (வீடியோ இணைப்பு)