துடுப்பாட்ட செய்தி மைதானத்திற்குள் ஏன் போகிறாய்? கிறிஸ் கெய்லை இழுத்துச் சென்ற நடுவர் (வீடியோ இணைப்பு)

gayle_stopped_001இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய டி20 போட்டியில் கிறிஸ் கெய்ல் களமிறங்காததால் ரசிகர்கள் அவரது அதிரடியை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
இலங்கை- மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டி20 உலகக்கிண்ண லீக் ஆட்டம் நேற்று பெங்களூரில் நடைபெற்றது.

இதில் களத்தடுப்பில் போது தொடையின் பின் பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கிறிஸ் கெய்ல் பாதியில் வெளியேறினார்.

போட்டியின் விதிமுறைப்படி ஒரு வீரர் எவ்வளவு நேரம் களத்தில் இல்லையோ, அந்த நேரம் முடிந்த பிறகு தான் மீண்டும் களமிறங்க முடியும்.

Advertisement

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடும் போது கிறிஸ் தொடக்க வீரராக களமிறங்கவில்லை.

இந்நிலையில் ராம்தின் ஆட்டமிழந்த நிலையில் 12.5 ஓவரில் கிறிஸ் கெய்ல் துடுப்பெடுத்தாட வந்தார். அப்போது அவரை நடுவர் இயான் கவுல்டு தடுத்து நிறுத்தினார்.

இன்னும் 11 நிமிடம் கழித்து அல்லது 2 விக்கெட் விழுந்த பிறகு தான் துடுப்பெடுத்தாட முடியும் என்றனர். இதனால் கெய்லை நடுவர் இயான் கவுல்டு உடைமாற்றும் அறையை நோக்கி நகைச்சுவையாக இழுத்துச் சென்றார்.

கிறிஸ் கெய்ல் களமிறங்காமலே மேற்கிந்திய தீவுகள் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. இதனால் அவரது அதிரடியை காண முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.