யாழில் ஒருவரைக் காதலித்த இரு மாணவிகள் தற்கொலை முயற்சி…??

20-1445358615-rope-364x245இளைஞன் ஒருவரைக் காதலித்த இரு பாடசாலை மாணவிகள் காதல் தோல்வி காரணமாக தற்கொலைக்கு முயன்ற சம்பவங்கள் யாழ். தென்மராட்சிப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன.

தென்மராட்சிப் பிரதேசத்திலுள்ள இருவேறு கல்லூரிகளில் கல்வி பயின்று வரும் 16 மற்றும் 17 வயதுடைய இரு மாணவிகளும் ஒரே இளைஞரைக் காதலித்து வந்துள்ளனர்.

இந்த விடயம் வீட்டாருக்குத் தெரியவர ஒரு மாணவி தூக்க மாத்திரைகளை அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அதேபோன்று மற்றைய மாணவியும் வீட்டிலிருந்த மாத்திரைகளை உட்கொண்டதோடு, கடிதம் ஒன்றை எழுதிவைத்து விட்டு கிணற்றுள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

குறித்த மாணவிகள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Previous articleஹன்சிகா மனசு யாருக்கு வரும்- எல்லா செலவையும் ஏற்றுக்கொண்டாராம்
Next articleபுதிய நோய்களுக்கு உள்ளாகி வரும் முள்ளிவாய்க்கால்!