புதிய நோய்களுக்கு உள்ளாகி வரும் முள்ளிவாய்க்கால்!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் தடைசெய்யப்பட்ட பாஸ்பரஸ் என்னும் எரி குண்டுகளை அப்போதைய இராணுவம் பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அக்குண்டுகளின் தாக்கம் தற்போது முள்ளிவாய்க்கால் வளாகத்தில் வாழும் மக்களுக்கு தொண்டை மற்றும் வாய் புற்றுநோய் என்பன வருவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.

குறிப்பாக ஜப்பானின் ஹிரோசிமா, நாகசாகி நகரங்கள் மீது 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்கியதன் விளைவு இன்று வரை அப்பிரதேசத்தில் பிறக்கும் குழந்தைகள் ஊனமாகவே பிறக்கின்றமை குறிப்பிடத்தக்கது.குறிப்பாக பின்வரும் புகைப்படங்கள் இலங்கை இராணுவம் இராசாயன ஆயுதங்களை பயன்படுத்தியமைக்கான ஆதாரங்களாக அமைகின்றன.

2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட இப் புகைப்படமானது இலங்கை இராணுவம் இராசாயன ஆயுதங்கள் பயன்படுத்தியமையை துல்லியமாகக் காட்டுகிறது.

இப் புகைப்படத்தை பகுப்பாய்வு செய்த வல்லுனர்கள் பொஸ்பரஸ் குண்டுகளின் தாக்கத்தால், படத்தில் காணப்படும் உடல் கருகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இப் புகைப்படத்தில் காணப்படும் உடலமானது பெரிதும் எரியாமல், மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் எரியாமலும் காணப்படுகிறது.

இருப்பினும் குண்டு பட்ட இடம் மட்டும் படு மோசமாக எரிந்தும், தசைகளை மற்றும் தோலை ஒரு பிளாஸ்டிக் போல உருக்கி எரியவைத்துள்ளது பதிவாகியுள்ளது.

பல உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் இலங்கை பாவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சில இடங்களில் புலிகளின் அகோரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினர் அப் பகுதிகள் நோக்கி பாரிய கனரகத் தாக்குதலை நடத்தியதோடு, நச்சு வாயுத் தாக்குதல் மற்றும் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் போன்றவற்றையும் நடத்தியுள்ளனர்.

தாமாகவே சில இடங்களை பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு, அவ்விடங்களில் மக்கள் செறிவாக இருந்தவேளை பல தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இவை அனைத்துமே இன அழிப்பு மற்றும் போற்குற்றங்கள் ஆகும்.

இதனை மூடி மறைக்கவே இலங்கை அரசானது இதுவரை எவரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுமதிப்பது இல்லை. இதேவேளை தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவிக்கப்பட்ட இடங்களை இலங்கை அரசானது தற்போது துப்பரவுசெய்து வருகிறது. மற்றும் எச்சங்களை அகற்றியும் வருவதை தமிழ் மக்கள் அறிந்ததே

 

முள்ளிவாய்க்காலிலுள்ள நிலத்தடி நீரில் மக்களுக்கு கொடிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய இரசாயனம் கலந்துள்ளது என்பதை அறிந்தும் தற்போதைய அரசாங்கம் எவ்வித மாற்று நடவடிக்கைகளையும் எடுக்க தயாராக இல்லை.

இவ்வாறாக இறுதி யுத்தத்தில் தமது சொந்தங்களை இழந்து தவித்து வருகின்ற ஈழ மக்கள் தற்போது புது புது நோய்களுக்கு உள்வாங்கிவருகின்றமை கவலைக்குறிய விடயமாகும்.

குறிப்பாக முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் உள்ள நிலத்தடி நீரில் இராசாயனம் கலந்திருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல்துறை மாணவர்கள் நடாத்திய ஆய்வில் ஏற்கனவே உறுதிசெய்யப்பட்டிருந்தது.

மேலும், யாழ்.பல்கலைக்கழக பௌதீகவியல்துறை மாணவர்கள், இரசாயனம் கலந்த நீரைக் குடித்தால் மனித உடலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும் என தெரிவித்திருந்தனர்.

குறிப்பாக, கர்ப்பவதிப் பெண்கள், சிறுவர்கள் போன்றோர் இந்த நீரைப் பருகினால் மிகவும் உடனடிப் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய நிலை ஏற்படும் என்றும் மேற்படி மாணவர்களும் விரிவுரையாளர்களும் எச்சரித்திருந்தனர்.

இந்நிலையில் தற்போது அதன் பெறுபேறாக தற்போது அங்கு வாழும் எமது மக்கள் புதிய புதிய நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதனை அவதானித்தும் தற்போதைய அரசாங்கம் ஊமையாக இருக்கின்றமை கவலைக்குறியவிடயமாகும்.

mulemule1mule2mule3mule4mule5mule6

Previous articleயாழில் ஒருவரைக் காதலித்த இரு மாணவிகள் தற்கொலை முயற்சி…??
Next articleஒற்றையாட்சிக்குள் அதிகாரத்தைப் பரவலாக்கி தீர்வுகளை பெற்றுக் கொள்வோம்