வலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நேரில் பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை!

vali north454dயாழ்.வலி. வடக்கு காங்கேசன்துறை- நடேஸ்வராக் கல்லூரியை அண்டிய பகுதிகள் கடந்த 12ம் திகதி மீள்குடியேற்றத்திற்காக அறிவிக்கப்பட்ட நிலையிலும், விடுவிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிடுவதற்கு இன்னமும் அனுமதிக்கப்படவில்லை. என மக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள்.
கடந்த 12ம் திகதி யாழ்.வந்த ஜனாதிபதி காங்கேசன்துறை- நடேஸ்வரா கல்லூரியை மீள ஆரம்பிப்பதற்கான உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியிருந்தார்.

இதனுடன் சேர்த்து மக்களுடைய நிலங்கள் சிலவும் விடுவிக்கப்பட்டிருந்தன.

குறிப்பாக காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி உள்ளடங்கலாக 109 ஏக்கர் நிலம் மற்றும், கட்டுவன் பகுதியில் 126 ஏக்கர் நிலம் ஆகியன மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த நிலங்களை பார்வையிடுவதற்கு மக்களுக்கு இதுவரையில் அனுமதி வழங்கப்படவில்லை.

குறிப்பாக நடேஸ்வரா கல்லூரி கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இயங்காத நிலையில் இருந்தமையினால் உடனடியாக அந்தப் பாடசாலையை இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். என கூறப்பட்ட போதும் அதற்கான முயற் சிகள் எந்தக்கட்டத்தில் இருக்கின்றன. என மக்கள் அறிய முடியாத நிலையே இருந்து வருவதாக மக்கள் கூறுகின்றனர்.

இதவேளை கடந்த வருடம் 12ம் மாதம் விடுவிக்கப்பட்ட 701.5 ஏக்கர் நிலத் திற்கும் கடந்த 12ம் திகதி நடைபெற்ற நிகழ்வில் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டது.

எனினும் மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்பட்டதன் பின்னரும் அந்தப் பகுதியில் மக்கள் சென்று உடனடியாக மீள்குடியேறுவதற்கான வசதிகள் எவையும் செய்யப்படவில்லை. என மக்கள் தெரிவிக்கின்றனர்.

Previous articleசற்றுமுன் முல்லைத்தீவு ஒருவர் பலி
Next articleபாண்ட்யாவின் “பலே” பிடியெடுப்பு! வியப்பில் உறைந்த ரசிகர்கள்