பாண்ட்யாவின் “பலே” பிடியெடுப்பு! வியப்பில் உறைந்த ரசிகர்கள்

Captureபாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணியின் சகலதுறை வீரர் ஹார்டிக் பாண்ட்யாவின் பிடியெடுப்பு அனைவரையும் வியக்க வைத்தது.
நேற்று முன் தினம் நடந்த இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு தொடக்க வீரர்களாக சர்ஜில் கான், ஷேஷாட் களமிறங்கினர்.

தொடக்கத்திலே பாகிஸ்தான் அணியின் ஓட்ட குவிப்பை கட்டுப்படுத்த திட்டம் தீட்டிய இந்திய அணித்தலைவர் டோனி, ரெய்னாவையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டார்.

ரெய்னா வீசிய 8வது ஓவரில் 4வது பந்தை சர்ஜில் கான் நேராக தூக்கி அடித்தார். அதை ஹார்டிக் பாண்ட்யா அசத்தலாக பிடியெடுத்தார்.

அந்தப் பிடியை விடக் கூடாது என்ற முயற்சியில் அவரது முகத்தில் பலத்த அடிப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சிறிது நேரம் மைதானத்திற்கு வெளியே ஓய்வு எடுத்தார்.

பிறகு சற்று நேரத்தில் மீண்டும் களமிறங்கிய பாண்ட்யா பந்துவீசி பாகிஸ்தான் அணியின் தலைவர் அப்ரிடியை 8 ஓட்டங்களில் வெளியேற்றினார்.

Previous articleவலி. வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை மக்கள் நேரில் பார்வையிடுவதற்கு அனுமதி இல்லை!
Next articleமாம்பழ தோலில் என்ன உள்ளது?