மேலும் 18 அகதிகள் தமிழ்நாட்டில் இருந்து தாயகம் திரும்புகின்றனர்

Refugeesதமிழ்நாட்டில் தங்கியுள்ள மேலும் 18 தமிழ் அகதிகள் வரும் 28ஆம் திகதி சிறிலங்காவுக்கு அழைத்து வரப்படவுள்ளனர். அகதிகளை சுயவிருப்பில் மீளக்குடியமர்த்தும் திட்டத்தின் கீழ், அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் இவர்களைத் தாயகம் அழைத்து வரும் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

10 ஆண்களும், 8 பெண்களுமாக 18 அகதிகள் வரும் 28ஆம் நாள் மிகின் லங்கா விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்படுவர்.

இவர்கள், திருகோணமலை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் மாவட்டங்களில் தமது சொந்த இடங்களில் குடியமர்த்தப்படவுள்ளனர்.

இவர்களுக்கான இலவச விமானப் பயணச்சீட்டை அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் வழங்குவதுடன், சமூக மீள் இணைப்பு கொடுப்பனவாக நபர் ஒருவருக்கு 75 டொலரையும், போக்குவரத்துக் கொடுப்பனவான 19 டொலரையும், குடும்பம் ஒன்றுக்கு உணவு அல்லாத பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு 75 டொலரையும் வழங்குகிறது.

இந்த திட்டத்தின் கீழ், 2011ஆம் ஆண்டில் இருந்து 1688 குடும்பங்களைச் சேர்ந்த 4654 அகதிகள், நாடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாட்டில் உள்ள முகாம்களில் வசித்து வரும் அகதிகளுக்கு மட்டுமே, அகதிகளுக்கான ஐ.நா முகவரகம் இந்த வசதிகளைச் செய்து கொடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleநாட்டில் நிலவிவரும் அதிக வெப்ப நிலை காரணமாக குழந்தைகளுக்கு ஆபத்து
Next articleமுல்லைத்தீவு மக்கள் வங்கியை இராணுவத்தினர் முற்றுகையிட்டுள்ளனர்