முல்லைத்தீவு நகரில் அமைந்திருக்கும் மக்கள்வங்கி மற்றும் இலங்கை வங்கிக் கிளைகளில் ஒவ்வொறுமாதமும் 20,21,22, ஆகிய திகதிகளில்இராணுவத்தினரின் பிரசன்னம் அதிகமாக காணப்படுகின்றது.
இதனால் பொதுமக்கள்(ATM) தாணியங்கி மூலம் பணத்தை பெற்றுக்கொள்வதில் சிரமத்தை சந்தித்துள்ளனர்.
அவசரமாக(ATM) பணத்தை பெற்றுக்கொள்வதற்கு இராணுவத்தினருடன் வரிசையில் நிற்கமுடியுமா? என்று யுவதி ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
ஏனைய மாவட்டங்களைவிட முல்லைத்தீவு மாவட்டதில் அதிகளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு கொடுக்கப்படும் விடுமுறை நாட்களிள் ஒரு நாளை வீனாக்காமல் கடமை நேரத்தில் இராணுவ சீருடையுடன் வாகனங்கள் சகிதம் வந்து மேற்குறிப்பிட்டது போல் செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எனினும் குறித்த இராணுவத்தினரிடம் ஆயுதங்கள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.