ஈழ அகதிகள் மண்டபம் முகாமில் சட்டவிரோதமாக தடுத்துவைப்பு.

DCF 1.0

DCF 1.0
DCF 1.0
தமிழக முகாமொன்றில் தமது குடும்பத்தினர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கதிரவேல் தயாபரராஜ் என்ற ஈழ அகதி குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி விசேட முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தம்மையும், சட்டவிரோதமான முறையில் இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அறை ஒன்றில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளையும் விடுதலைசெய்யுமாறு வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் காலவரையறை அற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த ஈழ அகதியின் மனைவியான உதயகலாவை ஐ.பி.சி தமிழ் செய்திப் பிரிவு தொடர்புகொண்டபோது இராமேஸ்வரம் – மண்டபம் பகுதியில் உள்ள கடற்கரைப்பகுதியில் தனிமைப்படுத்தப்பட்ட அறை ஒன்றில் தமது மூன்று பிள்ளைகளுடன் தாம் உணவு வசதிகள் இன்றி கடந்த 5 மாதங்களாக தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தமது வழக்குகள் நிறைவடைந்த நிலையில் கியூ பிரிவு பொலிஸாரால் சட்டவிரோதமான முறையில் தாம் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்த உதயகலா, பாடசாலை செல்லும் வயதிலுள்ள தமது மூன்று பிள்ளைகளுடன் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

தமது உடல்நிலை மோசமடைந்துள்ள நிலையிலும், அதிகாரிகள் எந்தவொரு உதவிகளையும் வழங்கவில்லை எனக்கூறிய அவர், அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி பல்வேறு துன்புறுத்தல்களுக்கு மத்தியில் ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்கும் என்ற அச்சத்தில் உள்ளதாக தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள அறையில் தடுத்துவைக்கப்பட்டிருப்பதால் தாம் உடல் மற்றும் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமது பிள்ளைகள் உணவு இல்லாமலும் பாடசாலை செல்ல முடியாமலும், தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அறையை விட்டு வெளியேவர முடியாமலும் துன்புறுவதாக அவர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Previous articleசொத்து தகராறில் தீர்த்துக் கட்டப்பட்டாரா நடிகர் கலாபவன்மணி? புதிய திருப்பம்
Next articleகொத்து ரொட்டி விசமானது! மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்!