அச்சுவேலி நகரப் பகுதியில் அமைந்துள்ள கொத்து ரொட்டிக்கடை ஒன்றில் தந்தை வாங்கி கொடுத்த கொத்து ரொட்டியினை உண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 சிறுவர்களுக்கு உணவு விஷமானதால் ஆபத்தான நிலையில் நேற்றையதினம் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வளலாய் வடக்கு பகுதியினை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்களான வின்சலாஸ் அகிலின்(06), வின்சலாஸ் லலின் (வயது05), வின்சலாஸ் ஜஸ்சிலின் வயது(02) ஆகியோரே மேற்படி உணவு விசமாகி மயங்கிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மதியம் குறித்த கடைக்கு வந்த தந்தை கொத்து ரொட்டியை வாங்கி சென்று அதனுடன் வாங்கி வந்த கறியினையும் ஊற்றி மூன்று பிள்ளைகளுக்கும் பகிர்ந்து கொடுத்துள்ளார். கொத்து ரொட்டியினை உண்ட சில மணி நேரத்தின் பின் மூன்று குழந்தைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வாந்தி எடுத்து மயங்கி வீழந்துள்ளனர்.
ஊடனடியாக அயலவர்களின் உதவியுடன் சிறுவர்கள் மூவரும் வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தந்தை போலியோ நோயினால் பாதிக்கப்பட்டு கால்கள் இரண்டும் இயலாதவர் என்பது குறிப்பிடத்தக்கது.